செய்திகள் உலகம்
இங்கிலாந்தின் கவென்ட்ரி நகர மேயராக ஜஸ்வந்த் சிங் தேர்வு
லண்டன்:
இங்கிலாந்தின் கவென்ட்ரி நகர மேயராக சீக்கியர் ஜஸ்வந்த் சிங் பிர்டி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இந்தியாவின் பஞ் சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜஸ்வந்த் சிங் பிர்டியின் குடும்பம் கடந்த 1960-ம் ஆண்டில் இங்கிலாந்தின் கவென்ட்ரி நகரில் புலம்பெயர்ந்தது.
கடந்த 4-ம் தேதி இங்கு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த 18-ம் தேதி மேயர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது.
கவென்ட்ரி மேயர் பதவிக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் நடைபெறாது. திறமை, நேர்மையின் அடிப்படையில் மேயரை தேர்வு செய்ய கவுன்சிலர்கள் வாக்களிப்பார்கள்.
அந்த அடிப்படையில் கவென்ட்ரி மாநகராட்சியில் தொழிலாளர் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தபோதிலும் திறமை, நேர்மையின் அடிப்படையில் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த சீக்கியர் ஜஸ்வந்த் சிங் பிர்டி மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
சுமார் 17 ஆண்டுகள் கவுன்சிலராகவும் ஓராண்டு துணை மேயராகவும் பிர்டி பதவி வகித்துள்ளார். அந்த அனுபவத்தின் அடிப்படையில் மாநகராட்சியை வழிநடத்துவேன் என்கிறார் ஜஸ்வந்த் சிங் பிர்டி.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 11, 2026, 12:06 pm
17 ஆண்டுகள் போலி விமானி உரிமத்துடன் விமானங்களை இயக்கிய முன்னாள் ஏர் கனடா விமானி கைது
June 11, 2026, 10:20 am
அமெரிக்கத் தாக்குதலைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடியதாக ஈரான் அறிவித்துள்ளது
June 10, 2026, 12:51 pm
‘டிஜிட்டல் காலனித்துவத்தின்’ கருவியாக AI மாறும் அபாயம்: அன்வார் எச்சரிக்கை
June 9, 2026, 4:28 pm
ஈரானுக்கு ஆதரவாக சமூக ஊடகப் பதிவு: குவைத் செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டு சிறை
June 9, 2026, 4:16 pm
H1-B விசா கட்டண உயர்வு ரத்து: ட்ரம்ப்புக்கு பின்னடைவு
June 8, 2026, 10:25 am
