நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறக்க குடியரசுத் தலைவரை ஏன் அழைக்கவில்லை?: காங்கிரஸ் கேள்வி

புது டெல்லி:

புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்வுக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

இந்தக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டியபோதும் அப்போது குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்தையும் ஒன்றிய அரசு அழைக்கவில்லை.

பிரதமர் மோடியே பூஜைகள் செய்து அடிக்கல் நாட்டினார். இது பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர்களுக்கு அவமதிப்பு என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

President Droupadi Murmu, Not PM Narendra Modi, Should Inaugurate Parliament':  Opposition Speaks in United Voice

தில்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி மே 28ஆம் தேதி திறந்து வைக்கிறார்.  இந்த விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ட்விட்டர் பதிவில்,பாஜக-ஆர்எஸ்எஸ் ஆட்சியில் குடியரசுத் தலைவர் பதவியின் மாண்பு தொடர்ந்து சீர்குலைக்கப்பட்டு வருகிறது.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழாவின்போது அப்போது குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இப்போது, அதன் திறப்பு விழாவின்போதும் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்காமல் அவமதித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset