நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பசிபிக் தீவு நாடுகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும்: பிரதமர் மோடி உறுதி

போர்ட் மோர்ஸ்பி:

பசிபிக் தீவு நாடுகளுக்கு அனைத்து விவகாரங்களிலும் இந்தியா ஆதரவு அளிக்கும்துணை நிற்கும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

இந்தியா மற்றும் 14 பசிபிக் தீவு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மூன்றாவது உச்சி மாநாடு, பப்புவா நியூ கினியாவின் போர்ட் மோர்ஸ்பி நகரில் நடைபெற்றது.

முன்னதாக அந்த நாட்டுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராப்பே காலில் விழுந்து வரவேற்றார். வயதில் மூத்தவர் என்பதால் அவ்வாறு செய்ததாக அவர் கூறினார்.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் தனது பலத்தை அதிகரிப்பதுடன், பசிபிக் தீவு நாடுகளில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சித்து வருகிறது.

இந்நிலையில்,  பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பேசுகையில், யாரை நம்பத்தகுந்தவர்களாக நாம் நினைத்தோமோ, அவர்கள் நமக்கு தேவையான நேரங்களில் நம்முடன் நிற்கவில்லை. தற்போதைய சவாலான காலகட்டத்தில், நல்ல நண்பனை ஆபத்தில் அறியலாம் என்ற பழமொழி உண்மையென நிரூபணமாகியுள்ளது.

கொரோனா பரவலின் தாக்கங்கள் மற்றும் இதர உலகளாவிய சவால்களுக்கு இடையே பசிபிக் தீவு நண்பர்களுக்கு உறுதுணையாக இந்தியா நிற்பது மகிழ்ச்சிக்குரியது. தடுப்பூசிகளோ, அத்தியாவசிய மருந்துகளோ, கோதுமையோ அல்லது சர்க்கரையோ, தனது திறன்களுக்கு ஏற்ப நட்பு நாடுகளுக்கு இந்தியா உதவி வருகிறது என்றார்.

முன்னதாக, டோக் பிசின் மொழியில் திருக்குறள் வெளியீடப்பட்டது. பாப்புவா நியூ கினியாவின் அதிகாரபூர்வ மொழி டோக் பிசின் ஆகும்.

தமிழின் தொன்மையான நூலான திருக்குறளின் டோக் பிசின் மொழிபெயர்ப்பு நூலை பிரதமர் மோடியும், பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராப்பேயும் வெளியிட்டனர்.

இந்த மொழியில் திருக்குறளை சுபா சசீந்திரனும், மேற்கு நியூ பிரிட்டன் மாகாண ஆளுநர் சசீந்திரன் முத்துவேலும் மொழிபெயர்த்துள்ளனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset