நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பிபிசிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

புது டெல்லி:

குஜராத் மதக் கலவரம் குறித்து பிபிசி வெளியிட்ட ஆணவப்படத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பிபிசிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

பிரதமர் நரேந்திர மோடி, குஜாரத் மாநில முதல்வராகப் பதவி வகித்த போது 2002ஆம் ஆண்டில் மதக்கலவரம் ஏற்பட்டது. இது தொடர்பாக "இந்தியா: தி மோடி க்வெஸ்டின்' என்ற ஆவணப்படத்தை பிரிட்டனின் தேசிய ஒலிபரப்பு நிறுவனமான பிபிசி இரு பகுதிகளாக கடந்த ஜனவரியில் வெளியிட்டது.

இந்த ஆவணப்படத்துக்கு ஒன்றிய அரசு தடைவிதித்தது.

ஜஸ்டிஸ் ஆன் ட்ரையல் என்ற என்ஜிஓ அமைப்பு தில்லி உயர் நீதிமன்றத்தில் இந்த ஆவண படத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளது.

அதில், பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் அவமதிப்பை ஏற்படுத்துகிறது.

நீதிமன்ற கட்டணத்தைச் செலுத்தும் வகையில் இடைக்கால நிவாரணமாக ரூ.10,000 கோடி வழங்க பிபிசிக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தது. இந்த மனு மீது பதிலளிக்க நீதிபதிகள் பிபசிக்கு உத்தரவிட்டனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset