நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்திய நாடாளுமன்ற புதிய கட்டடம் 28-ஆம் தேதி திறப்பு

புது டெல்லி:

சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாயில் கட்டப்பட்ட  நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை  பிரதமர் நரேந்திர மோடி மே 28ம் தேதி திறந்து வைக்கிறார்.

தற்போதைய நாடாளுமன்றக் கட்டடம் 1927 இல் கட்டி முடிக்கப்பட்டது. இடப்பற்றாக்குறை காரணமாக  நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்ட நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

2020 டிசம்பர் 10  புதிய கட்டடத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இது உரிய நேரத்தில் கட்டப்பட்டு, அதிநவீன வசதிகளுடன் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

கொரோனா பொது முடக்க காலத்திலும் இடைவிடாது பணிகள் நடைபெற்றன.
பிரதமர் மோடியன் கனவு திட்டமான புதிய நாடாளுமன்றத்தை கடந்த நவம்பர் மாதத்தில் தொடங்க மோடி திட்டமிட்டார்.

ஆனால் பணிகள் தொடர்ந்த நடைபெற்றதால் திறக்க முடியவில்லை. 543 எம்பிக்களே உள்ள மக்களவைில் 888 எம்பிக்கள் அமரும் வகையில் பிரம்மாண்டமான அவை கட்டப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை சாவர்க்கர் பிறந்த தினத்தில் மோடி திறக்க திட்டமிட்டுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. நாட்டின் சுதந்திரத்துக்கு எந்தவகையில் பங்காற்றாத சாவர்க்கரின் பிறந்ததினத்தில் நடைபெறும் இந்த விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset