நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அனைத்து மாநிலங்களிலும் பாஜக தோற்கும்: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: 

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பாஜக தோற்கடிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

எனது கட்சியினர் மற்றும் குடும்ப உறுப்பினர்களை குறிவைத்து, மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது.

அபிஷேக் பானர்ஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதன் பின்னணியில் பாஜகவே உள்ளது. ஆனால், நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம்.

எங்கள் கட்சியின் பிரசாரத்துக்கு கிடைத்து வரும் வெற்றியால் பாஜகவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து அக் கட்சியை அகற்றும் வரை எங்களது போராட்டம் ஓயாது.

அனைத்து மாநிலங்களிலும் பாஜக தோற்கடிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றார் மம்தா.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset