நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கவிழ்ந்த சீன மீன்பிடி படகை தேடும் பணியில் இந்தியா

புது டெல்லி:

இந்திய பெருங்கடலில் சீன மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 39 பேர் மாயமான நிலையில், படகை தேடும் பணியில் இந்திய கடற்படையின் பி8ஐ விமானம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் மீன்பிடி படகு செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதில் 17 சீனர்கள், 17 இந்தோனேசியர்கள், 5 பிலிப்பின்ஸ் நாட்டவர் இருந்தனர். விபத்துக்குப் பிறகு அந்த 39 பேரும் மாயமாகினர்.

அவர்களில் இருவர் உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் வியாழக்கிழமை தெரிவித்தார்.

படகை தேடும் பணி மற்றும் மீட்பு நடவடிக்கையில் பல்வேறு நாடுகளிடம் சீனா உதவி கோரியது.  

இதையடுத்து, இந்திய கடற்படையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பாக கடற்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கடற்படையின் ரோந்து விமானமான பி8ஐ மாயமானவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் 900 கடல்மைல் தொலைவுக்கு இந்த தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள சீனா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு உரிய உதவியும், ஒத்துழைப்பும் அளிக்கப்படுகிறது' என்று கூறப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset