நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சித்தராமையா கர்நாடக முதல்வர், துணை முதல்வர் டி.கே. சிவகுமார்

புது டெல்லி:

கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவகுமாரும் பதவி விகிப்பார்கள் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இவர்களை அதிகாரபூர்வமாக தேர்வு செய்வதற்கான எம்எல்ஏக்களின்  கூட்டம் கர்நாடகத்தில் இன்று மாலை நடைபெறுகிறது.

கர்நாடக பேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் 135 இடங்களில்  அமோக வெற்றி பெற்று, பெரும்பான்மை பலம் நிரூபித்தது. இதையடுத்து, அந்த மாநில முதல்வராக பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவகுமார் இடையே போட்டி நிலவி வருகிறது.

இப் போட்டியில் சித்தராமையா முன்னணியில் இருப்பதாக முதலில் இருந்தே தகவல்கள் தெரிவித்தன. சிவகுமாரும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், முதல்வரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடித்தது.

இதை சரி செய்யும் வகையில் இருவரையும் தில்லி வர வழைத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனித் தனியாக பேசினார்.

ராகுல் காந்தியும் இருவரிடமும் பேசி சமாதானப் படுத்தி சிவகுமாரை துணை முதல்வராக ஏற்றுக் கொள்ள வைத்தார்.

கடந்த 3 நாள்களாக நடைபெற்ற ஆலோசனையில் வியாழக்கிழமை அதிகாலை சித்தராமையாவை காங்கிரஸ் மேலிடம் கர்நாடகாவின் அதிகாரபூர்வ முதல்வராகவும், சிவகுமாரை துணை முதல்வராகவும் அறிவித்தது.

இது சிவகுமார் ஆதரவாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. எனினும், 5 ஆண்டுகள் ஆட்சி காலம் இருப்பதால் முதல்வர் பதவி குறித்து பின்னர் பார்த்து கொள்ளலாம் என சிவகுமார் ஆதரவாளர்கள் தெரிவித்து சமாதானமடைந்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset