
செய்திகள் வணிகம்
சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு 2.2 பில்லியன் வெள்ளி நிகர லாபம்
சிங்கப்பூர்:
SIA குழுமம், கடந்த நிதியாண்டில் 76 ஆண்டுகள் காணாத அளவு ஆக அதிகமான நிகர லாபத்தைப் பெற்றிருக்கிறது.
நோய்ப்பரவல் காரணமாகக் கடந்த மூவாண்டுகளாகக் குழுமம் நட்டத்தைச் சந்தித்தது.
வலுவான தேவையும் விமானப் போக்குவரத்துத் துறையின் மீட்சியும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் வருவாய்க்குக் கைகொடுத்தன.
கடந்த நிதியாண்டில் அதற்கு 2.2 பில்லியன் வெள்ளி நிகர லாபம் பதிவானது.
அதற்கு முந்தைய ஆண்டு, 962 மில்லியன் வெள்ளி நட்டம் பதிவானது.
வரும் ஆண்டுகளில், கிழக்காசியாவில் விமானப் போக்குவரத்து மீட்சி காணும் என்று எதிர்பார்ப்பதாய் குழுமம் தெரிவித்தது.
விமானப் போக்குவரத்துக்கான தேவையும் தொடர்ந்து வலுவாக இருக்கும் என்று அது குறிப்பிட்டது.
இருப்பினும் நிச்சயமற்ற பொருளியல் சூழலால் அதிகரித்துள்ள போட்டித்தன்மையும் பணவீக்கமும் விமானப் போக்குவரத்துத் துறைக்குச் சவாலாக அமையலாம் என்று எச்சரிக்கப்பட்டது.
அண்மை மாதங்களில் விமான எரிபொருள் விலைகள் தொடர்ந்து உயர்வாகவே இருப்பதாகச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டது.
ஆதாரம் : CNA
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 2:16 pm
மும்பையில் அமைகிறது முதல் டெஸ்லா ஷோரூம்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm