நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மருத்துவரை தற்கொலைக்கு தூண்டியதாக பாஜக எம்பி மீது வழக்கு

அகமதாபாத்:

குஜராத்தில் மருத்துவரை தற்கொலைக்குத் தூண்டியதாக அந்த மாநில பாஜக எம்.பி ராஜேஷ் சுதாஷ்மா, அவரது தந்தை நரன்பாய் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

3 மாதங்களுக்குப் பிறகு இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விராவல் நகரைச் சேர்ந்த மருத்துவர் அதுல் சாக், கடந்த பிப்ரவரி 12 தேதி தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்பு பாஜக எம்.பி. ராஜேஷ், தந்தை நரன்பாய் மீது குற்றம்சாட்டி கடிதம் அவர் எழுதியிருந்தார்.

ஆனால், அவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யாமல் இருந்தனர். தற்போது பாஜக எம்.பி. ராஜேஷ் மற்றும் அவரின் தந்தை மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மருத்துவரிடம் இருந்து பல்வேறு தவணையாக, எம்பியும் அவரது தந்தையும் ரூ.1.75 கோடி கடன் பெற்றுள்ளனர். பணத்தை திருப்பி அளிப்பதற்காக அவர்கள் அளித்த காசோலைகள் வங்கியில் பணமில்லாததால் திரும்பி வந்தது.

பணத்தை திருப்பி தர எம்பியும் அவரது தந்தையும் மறுத்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த மருத்துவர் அதுல், எம்.பி. மற்றும் அவரின் தந்தை பணம் கொடுக்காமல் தன்னை ஏமாற்றியதை எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset