நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உ.பி. உள்ளாட்சி தேர்தலில் முஸ்லிம் மஜ்லிஸ், ஆம் ஆத்மி கட்சிகள் கால்பதித்தன

லக்னோ:

உத்தரப் பிரதேச நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் முதல் முறையாக வெற்றி பெற்றனர்.

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 17 மேயர் பதவிகளையும் பாஜக கைப்பற்றியுள்ளது.

நகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் அக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் கட்சி மாநகராட்சிகளில் 19 கவுன்சிலர் பதவிகளையும், ஆம் ஆத்மி 8 கவுன்சிலர் பதவிகளையும் கைப்பற்றியுள்ளன.

இந்தத் தேர்தலில் முறையாக பாஜக முஸ்லிம் வேட்பாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பளித்தது.  

முதல்முறையாக 395 முஸ்லிம் வேட்பாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பளித்தது. இதில் 60 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

நகராட்சி உறுப்பினர்களாக அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் கட்சியைச் சேர்ந்த 33 பேரும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 30 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.

நகர பஞ்சாயத்து தலைவர்களாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 6 பேரும், மஜ்லிஸ் கட்சியைச்  சேர்ந்த ஒருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset