
செய்திகள் தமிழ் தொடர்புகள்
திமுக ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார்கள்; கள்ளச் சாராய ஆறுதான் ஓடுகிறது: எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்
மரக்காணம்:
ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி கள்ளச்சாராயம், போலி மதுபானங்களை விற்றதால் அப்பாவி மக்கள் இறந்திருக்கிறார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.
மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள், அரசியல் பின்புலம் உள்ளவர்கள் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி போலி மதுபானம், கள்ளச்சாரயத்தை விற்பனை செய்ததால் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளார்கள்.
செங்கல்பட்டில் போலி மது அருந்தியவர்களும், மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்தவர்களும் இறந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் அரசியல் பின்புலம் உள்ள ஒருவர் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள், அரசியல் பின்புலம் உள்ளவர்கள் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி போலி மதுபானம் விற்பனை செய்துள்ளதால் அப்பாவி மக்கள் இறந்திருக்கிறார்கள்.
கடந்த அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தனியாக ஒரு குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த 2 ஆண்டுகளில் கள்ளச்சாராய வியாபாரிகள், போலி மதுபான வியாபாரிகள் பெருகி இருக்கிறார்கள்.
கடந்த 2 நாளில் மட்டும் கள்ளச்சாராய வழக்கில் 1,600 பேரை கைது செய்துள்ளார்கள் என்றால், இவர்கள் தினமும் கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் பல்லாயிரக்கணக்கானோர் உடல்நலம் பாதிக்கப்படுவார்கள்.
இதற்கெல்லாம் முழு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேனாறும், பாலாறும் ஓடும் என்று கூறினார்கள். ஆனால் இப்போது சாராய ஆறுதான் தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.
சமூகப்போராளிகள்எங்கே?:
இதுமட்டுமில்லாமல் சமூகப் போராளிகள் என்று பலர் கூறிக்கொண்டு இருந்தார்கள். சாராயத்தை தடுப்பதை பற்றி அவர்கள் பாட்டெல்லாம் பாடினார்கள்.
அவர்கள் இப்போது எங்கு சென்றார்கள் என தெரியவில்லை. அவர்கள் எல்லோருமே திமுகவின் கைக்கூலிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு இவ்வளவு உயிர்கள் பறிபோய் இருக்கிறது. எந்த சமூகப் போராளியும், நடிகரும் குரல் கொடுக்கவில்லை. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளும் வாய்த் திறக்காமல் மவுனம் காக்கிறார்கள் என்றார்.
செங்கல்பட்டு மருத்துவமனை: இதேபோன்று கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் பழனிச்சாமி ஆறுதல் தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 10:49 pm
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு மலேசியாவில் நடைபெறும்: டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால்
May 11, 2025, 5:07 pm
இஸ்லாமியர்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளும் பயங்கரவாதம் தான்: தொல் திருமாவளவன்
May 11, 2025, 4:12 pm