
செய்திகள் தமிழ் தொடர்புகள்
பொன்னியின் செல்வன் தயாரிப்பு நிறுவனமான லைகா தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
சென்னை:
சென்னையில் லைகா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
லைகா நிறுவனம் தமிழில் பல பெரிய திரைப்படங்களை தயாரித்து வருகிறது. சமீபத்தில் இந்த நிறுவனம் தயாரித்த 'பொன்னியின் செல்வன்' படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், சென்னையில், லைகா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதன்படி, சென்னை தி.நகரில் உள்ள லைகா நிறுவனத்தின் அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத் தவிர்த்து அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. துணை ராணுவத்தினரின் பாதுகாப்போடு அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பொன்னியின் செல்வன் இரு பாகங்களின் வெளியீட்டுக்கு பிறகு, உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ள மாமன்னன் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த நிலையில் லைக்கா நிறுவனத்தின் பல்வேறு அலுவலகங்களில் இந்த அமலாக்க சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 10:49 pm
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு மலேசியாவில் நடைபெறும்: டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால்
May 11, 2025, 5:07 pm
இஸ்லாமியர்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளும் பயங்கரவாதம் தான்: தொல் திருமாவளவன்
May 11, 2025, 4:12 pm