நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

காங்கிரஸுக்கு நிபந்தனை ஆதரவு: மம்தா திடீர் முடிவு

கொல்கத்தா:

அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பலம் வாய்ந்த இடங்களில் மட்டும் அக்கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸுடன் கூட்டணி வைக்க போவதில்லை என்று திட்டவட்டமாக கூறி வந்த மம்தா பானர்ஜி, கர்நாடக பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு தனது நிலைப்பாட்டில் இருந்து திடீரென மாறி உள்ளார்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, காங்கிரஸ் பலமாக உள்ள இடங்களில் அக்கட்சி போட்டியிடட்டும். அவர்களுக்கு ஆதரவு வழங்க நாங்கள் தயார்.

ஆனால், ஆதரவைப் பெற மற்ற கட்சிகளையும் காங்கிரஸ் ஆதரிக்க வேண்டும். தொகுதி ஒதுக்கீட்டில் பலம் வாய்ந்த பிராந்திய கட்சிகளுக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset