நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

முதல்வர் பதவி சித்தராமையா சிவகுமாருக்கு இடையே போட்டி

புது டெல்லி:

கர்நாடக முதல்வர் பதவியைப் பெற முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும், மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இருவரும் தில்லியில் முகாமிட்டுள்ளனர். அவர்களுடன் காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தி இந்தப் பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதில் சித்தராமையா முதல்வர் ஆக அதிக எம்எல்ஏக்கள் ஆதரவாக அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மேலிடப் பார்வையாளர்கள் கர்நாடக எம்எல்ஏக்களிடம் ஞாயிற்றுக்கிழமை பெறப்பட்ட கருத்துகள் தொடர்பான அறிக்கையை தில்லியில் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் திங்கள்கிழமை  சமர்ப்பித்தனர். இதன் படி ஓரிரு நாளில் முதல்வர் பதவி யாருக்கு அளிப்பது என்று கட்சி மேலிடம் முடிவு செய்ய உள்ளது.

முன்னதாக, முதல்வர் பிரச்னைக்கு தீர்வுகாண கட்சி மேலிடம் அழைத்ததன் பேரில் சித்தராமையா திங்கள்கிழமை தில்லி வந்தார்.

ஆனால், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி டி.கே.சிவகுமார் தில்லி பயணத்தை கடைசி நேரத்தில் தவிர்த்தார்.

உடல்நலக் குறைவால் தில்லி செல்லவில்லை என்று டி.கே.சிவகுமார் விளக்கம் அளித்தார். எனினும், கட்சி மேலிடத்தின் அழைப்பை ஏற்று செவ்வாய்க்கிழமை தில்லி  செல்கிறார்.

சித்தராமையா, சிவகுமார் இருவரையும் சமாதானப்படுத்தி முதல்வர் பதவியை வழங்க கட்சி முடிவு செய்துள்ளது.

34 ஆண்டுகளுக்கு பிறகு, கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset