நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையை திறந்தவெளியில் தொழுவதற்கு பெர்லிஸ் அரசு அனுமதி

கங்கார்: 

ஹஜ்ஜு பெருநாள் தொழுகையை திறந்தவெளிகளில் தொழுவதற்கு பெர்லிஸ் மாநில இஸ்லாமிய சமய விவகாரத்துறை அனுமதி வழங்கி இருக்கிறது.

பெர்லிஸ் மன்னர் துவாங்கு சையத் பைசுதீன் புத்ரா ஜமாலுல்லாயின் ராஜா முடா, இது கோவிட் -19 நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைப்பதோடு  இறைவழிபாட்டை பூர்த்தி செய்த பயனையும் தரும் என்று கூறினார்.

SOP for other religious activities to be tabled next week

"பள்ளிவாசல்களில் காலை 8 மணிக்கு தியாகத் திருநாள் தொழுகைகள் தொடங்கும். ஆனால் உள்புற தொழுகைக்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் தான் பொது மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்" என்று பெர்லிஸ் இஸ்லாமிய சமய விவிகாரத்துறை (MAIP) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 20 ஆம் தேதி ஈதுல் அத்ஹா எனும் ஹஜ்ஜுப்பெருநாள் கொண்டாடப்பட இருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

+ - reset