நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வெறுப்புணர்வின் சந்தை மூடப்பட்டு, அன்பின் கடைகள் திறக்கப்பட்டுள்ளன : ராகுல்

புது டெல்லி:

கர்நாடகத்தில் வெறுப்புணர்வின் சந்தை மூடப்பட்டு, அன்பின் கடைகள் திறக்கப்பட்டுள்ளன என்று தேர்தல் வெற்றி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

கர்நாடக பேரவைத் தேர்தல் வெற்றி குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறுகையில், கர்நாடக மக்கள், காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெறுப்புணர்வு, முறையற்ற பேச்சுகள் இல்லாமல் அன்பின் அடிப்படையிலேயே கர்நாடகத் தேர்தலை காங்கிரஸ் எதிர்கொண்டது. கர்நாடகத்தில் தற்போது வெறுப்புணர்வின் சந்தை மூடப்பட்டு, அன்பின் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

தேர்தலில் ஏழைகளின் வலிமை ஒருபக்கமும் முதலாளித்துவம் மறுபக்கமும் போட்டியில் இருந்தன. முடிவில், ஏழைகளின் வலிமையானது முதலாளித்துவவாதிகளைத் தோற்கடித்துள்ளது. இது இனி அனைத்து மாநிலங்களிலும் எதிரொலிக்கும் என்றார்.

ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணமே, கர்நாடக மாநில பேரவைத் தேர்தலில் வெற்றிக்கான முக்கியக் காரணம் என காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset