
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னை விமான நிலையத்தில் ரூ.14.43 கோடி மதிப்புள்ள கடத்தி வரப்பட்ட 23.34 கிலோ தங்கம் பிடிபட்டது
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் ரூ.14.43 கோடி மதிப்புள்ள 23.34 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாயில் இருந்து கொழும்பு வழியாக சென்னைக்கு விமானத்தில் வந்த ஒரு பெண் பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவர், ஆட்டோவில் ஏறி புறப்பட்டார்.
பின்தொடர்ந்து சென்ற அதிகாரிகள், அவரைப் பிடித்து சோதனை செய்தனர். அவர் அணிந்திருந்த பேண்ட் பாக்கெட்டில் ரூ.8.28 கோடி மதிப்புள்ள 13.28 கிலோ தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அவர் கொடுத்த தகவலின்படி, கொழும்பில் இருந்து விமானத்தில் சென்னை வந்த இலங்கையை சேர்ந்த பயணியின் உடமைகளை சோதனை செய்தபோது, ரூ.6.15 கோடி மதிப்புடைய 10.06 கிலோ எடையிலான தங்கக்கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இருவரிடம் இருந்தும் ரூ.14.43 கோடிமதிப்புள்ள 23.34 கிலோ தங்கத்தைபறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 10:49 pm
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு மலேசியாவில் நடைபெறும்: டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால்
May 11, 2025, 5:07 pm
இஸ்லாமியர்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளும் பயங்கரவாதம் தான்: தொல் திருமாவளவன்
May 11, 2025, 4:12 pm