நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

40 முஸ்லிம்கள் பலியான தில்லி வன்முறை வழக்கில் 9 முஸ்லிம்களுக்கு 7 ஆண்டுகள் சிறை

புது டெல்லி:

தில்லியில் சிஏஏவுக்காக எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறி 40 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட வழக்கில் 9 முஸ்லிம்களுக்கு தில்லி நீதிமன்றம் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது.

2019-இல் ஒன்றிய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக, பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

அதுபோல, தில்லி ஷஹீன் பாக் பகுதியில் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமைதியான முறையில் தொடர் போராட்டம் நடைபெற்றது.

அப்போது, வடமேற்கு தில்லி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட ஒன்றிய இணையமைச்சர் அனுராக் தாக்குர், தேச விரோதிகளை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று பேசினார்.

அதனைத் தொடர்ந்து, தில்லி ஜாமியா மிலாயா பல்கலைக்கழகம் அருகேயும் ஷஹீன் பாக் பகுதியிலும் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து வடகிழக்கு தில்லியில் நடைபெற்று வந்த சிஏஏ எதிர்ப்புப் போராட்டம் வன்முறையாக மாறியது.

இதில் முஸ்லிம்களின் கடைகள் அதிக அளவில் சேதப்படுத்தப்பட்டன. இந்த வன்முறையில் 40 முஸ்லிம்கள், ஒரு காவலர் உள்பட 52 பேர் உயிரிழந்தனர். பல கோடி மதிப்பிலான பொருள்கள் நாசமாகின.

இந்த வன்முறை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறி ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள், ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் என 18 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முஹம்மது ஷாநவாஸ், முஹம்மது ஷோயப், ஷாருக், ரஷீத், ஆஸாத், அஷ்ரஃப் அலி பர்வேஸ், முஹம்மது ஃபைசல் உள்பட 9 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. அவர்களுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset