நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஆளுநர், துணைநிலை ஆளுநருக்கான அதிகாரங்கள்: இந்திய உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

புது டெல்லி:

மகாராஷ்டிர ஆட்சி மாற்றத்தில் ஆளுநரின் செயல்பாடுக்கு உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு கண்டனம் தெரிவித்து, ஆளுநர் உள்கட்சி அரசியல் விவகாரங்களில் தலையிட கூடாது என தெரிவித்தது.

இதேபோல், தில்லியின் ஆட்சி அதிகாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி அரசுக்கு நிர்வாகத்தில் அதிகாரம் உள்ளது என்றும் இதில் துணைநிலை ஆளுநர் தலையிடக் கூடாது என்றும் மற்றொரு அரசியல் சாசன அமர்வு தீ்ர்ப்பளித்துள்ளது.

ஆளுநர்களின் செயல்பாடுகளுக்கு வரம்பு விதிக்கும்வகையில், ஒரே நாளில் வெளியான இந்த 2 தீர்ப்புகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

மகாராஷ்டிர ஆட்சி மாற்றத்தில் ஆளுநரும், பேரவைத் தலைவரும் தவறிழைத்துள்ளதாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"உத்தவ் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் முடிவெடுத்து அப்போதைய ஆளுநர் பகத்சிங் கோஷியாரி தவறிழைத்துள்ளார்.

ஷிண்டே தரப்பு எம்எல்ஏக்கள் வழங்கிய கடிதத்தின் அடிப்படையில் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் கூறியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில் அவர்கள் மகா விகாஸ் கூட்டணி தலைமையிலான அரசில் இருந்து வெளியேறுவதாக எங்கும் குறிப்பிடவில்லை.

சில எம்எல்ஏக்கள் அதிருப்தி தெரிவிப்பதால் மட்டும் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அரசுக்கு ஆளுநர் உத்தரவிட முடியாது. இதுபோன்ற அரசியல் விவகாரங்களில் உரிய ஆதாரங்களின் அடிப்படையில், தெளிவாக சிந்தித்தே ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்.

உள்கட்சி விவகாரங்களில் மாநில ஆளுநர் தலையிடுவதை ஏற்க முடியாது.
ஷிண்டே தரப்பு எம்எல்ஏ}க்கள் குழு நியமித்த பரத் கோகவாலேவை சிவசேனை கொறடாவாக ஏற்று அப்போதைய சட்டப் பேரவைத் தலைவர் தவறிழைத்துள்ளார்.

அவரது முடிவு சட்டவிதிகளுக்கு முரணானது எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

எனினும், வாக்கெடுப்புக்கு முன்பே அப்போதைய முதல்வர் உத்தவ் தாக்கரே பதவி விலகியதால் அவரை மீண்டும் முதல்வராக உச்சநீதிமன்றம் பரிசிலிக்க முடியாது.

மேலும், ஷிண்டே உள்ளிட்ட 16 எம்எல்ஏக்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவரே முடிவெடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து உத்தவ் தாக்கரே கூறுகையில், முதல்வர் பதவியை நான் ராஜிநாமா செய்தது சட்டத்துக்கு விரோதமாக இருக்கலாம்.

ஆனால், மனசாட்சிப்படியே நான் ராஜிநாமா செய்தேன். முதுகில் குத்தியவர்களை வைத்துக் கொண்டு எவ்வாறு ஆட்சியை நடத்த முடியும்? என்றார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், முறையற்ற முடிவுகளின் அடிப்படையில் ஆளுநர் செயல்பட்டுள்ளார்.

கட்சி கொறடாவைப் பேரவைத் தலைவர் தவறாக அங்கீகரித்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி: இதேபோல், டெல்லி அரசில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே நிர்வாக அதிகாரம் உள்ளது என்று அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.

நிலம், காவல் துறை, பொது அதிகாரம் என்ற மூன்றைத் தவிர அனைத்து அதிகாரங்களும் தில்லி அரசுக்குதான் உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset