நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

ஓபிஆர் கட்டண உயர்வால் ஏற்படும் சுமை வாடகை வீட்டில் வாழ்பவர்களின் தலையிலும் விழும்

கோலாலம்பூர்:

ஓபிஆர் கட்டண உயர்வால் ஏற்படும் சுமை வாடகை வீட்டில் வாழ்பவர்களின் தலையிலும் விழும் என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.

ஓபிஆர் வட்டி விகிதம் 3 சதவீதத்திற்கு உயரும் என பேங்க் நெகாரா அறிவித்துள்ளது.

தற்போதை 2.75 விகிதமாக இருக்கும் இந்த வட்டி விகிதம் விரைவில் 3 சதவீதமாக உயரும்.

இதனால் வங்கிக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டணமும் உயரும்.

இது தங்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் என்று வங்கியில் கடன் பெற்றவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

பலர் முதலீட்டுக்காக வீடுகளை வாங்கி அதை வாடகைக்கு விட்டிருப்பார்கள்.

தற்போது இந்த ஓபிஆர் கட்டண உயர்வை சமாளிக்க அவர்கள் வாடகையை உயர்த்துவதை விட வேறு வழி இருக்காது.

அதன் அடிப்படையில் ஓபிஆர் கட்டண உயர்வின் சுமை தற்போது வாடகை வீட்டில் இருப்பவர்களின் தலையிலும் விழும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset