நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கர்நாடக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்: காங்கிரஸ் 140, பாஜக 80

பெங்களூரு: 

கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தனியார் தொலைக்காட்சிகள் சில தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளன. 

அதன்படி பல்வேறு கருத்துக் கணிப்புகளிலும் காங்கிரஸ் சராசரியாக 100-க்கும் மேற்பட்ட இடங்களிலும், பாஜக 80+க்கும் குறைவான இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

224 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள நிலையில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். 

ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலானவை எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறும் என்று குறிப்பிடவில்லை. 

இருப்பினும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் காங்கிரஸுக்கு சற்று கூடுதல் இடம் கிடைக்கும் என்றே குறிப்பிட்டுள்ளன.

குறிப்பாக இண்டியா டுடே ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் 122-140 இடங்களிலும் பாஜக 62-80 இடங்களிலும்
ஜேடிஎஸ் 20-25 இடங்களிலும் வெற்றி பெறுவார்கள் என்று கூறியுள்ளார்கள்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset