நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

விடுவிக்கப்பட்ட பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளை கண்டுபிடிக்க உச்சநீதிமன்றம் புது யோசனை

புது டெல்லி:

குஜராத் கலவரத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பில்கிஸ் பானு வழக்கில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட குற்றவாளிகள் சிலரை கண்டுபிடிக்க முடிவில்லை என்பதால் வழக்கு விசாரணை தொடர்பாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

2002 கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு நடைபெற்ற மதக் கலவரத்தில் கர்ப்பிணி பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அவரது குடும்பத்தினர் 7 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளை குஜராத் அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்டனைக் காலம் முடிவதற்குள் விடுதலை செய்தது.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை த மே 2ஆம் தேதி நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா,  அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தபோது, சில குற்றவாளிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படவில்லை என்பதால் வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று அவர்களது தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் கூறினர்.

அப்போது நீதிபதிகள், இந்த வழக்கை இந்த அமர்வு விசாரிக்கக் கூடாது என்று அனைத்து குற்றவாளிகளும் விரும்புகிறார்கள் என்று குறிப்பிட்டு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் குற்றவாளி ஒருவரின் வீடு பூட்டப்பட்டும், அவரது கைப்பேசி அணைக்கப்படும் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், கண்டுபிடிக்க முடியாத குற்றவாளிகளுக்கு குஜராத்தி, ஆங்கில பத்திரிகைகளில் விளம்பரமாக நோட்டீஸ் அளிக்கப்பட வேண்டும் என்று கூறி, வழக்கை ஜூலை 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள கேஎம்.ஜோசப் ஜூன் 16ஆம் தேதி முதல் ஓய்வு பெறுவாதல் புதிய அமர்வு இந்த வழக்கின் அடுத்த விசாரணையை விசாரிக்கும்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset