நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

முஸ்லிம்கள் இடஒதுக்கீடு ரத்து குறித்து தேர்தல் பிரசாரம்: உச்சநீதிமன்றம் அதிருப்தி

புது தில்லி:

கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில், அதை தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக பேசி வாக்குகளைக் கேட்டதற்கு  உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து தேர்தலுக்கு முன்பு மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. அந்த இடஒதுக்கீட்டை மாநிலத்தில் ஆதிக்க சமூகத்தினராக உள்ள ஒக்கலிகர்கள், லிங்காயத்துகளுக்கு அளித்தது. இதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசஃப், பி.வி.நாகரத்னா, அசானுதீன் அமானுல்லா ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர்.

அப்போது மனுதாரர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கர்நாடகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாள்தோறும் பேசுகிறார். எதற்காக இதுபோன்ற கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன என்று கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து கர்நாடக அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக தெரிவிக்கப்பட்ட எந்தவொரு கருத்து குறித்தும் எனக்குத் தெரியாது.

ஆனால், மத அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப்படக் கூடாது என்று ஒருவர் கூறினால், அது உண்மைதான். அதில் என்ன தவறு உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

நீதிபதி கே.எம்.ஜோசப் கூறுகையில், முஸ்லிம்கள் இடஒதுக்கீடு தொடர்பாக ஏற்கெனவே இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற விசாரணையில் இருக்கும் விவகாரம் குறித்து அரசியல் ரீதியாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்கக் கூடாது. அவ்வாறு செய்வது சரியல்ல என்று தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset