நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கர்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: 38 ஆண்டு வரலாறு தொடருமா?

பெங்களூர்:

கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு புதன்கிழமை காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

224 தொகுதிகளில் 2,615 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.

மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதிவாகும் வாக்குகள் வரும் 13ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

மொத்தம் 5,31,33,054 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் ஆண்கள் 2,67,28,053, பெண்கள் 2,64,00,074, மூன்றாம் பாலினத்தவர் 4,927, மாற்றுத் திறனாளிகள் 5,71,281 அடங்குவர். இதில், 11,71,558 பேர் புதிய தலைமுறை வாக்காளர்கள்.  மாநிலம் முழுவதும் 58,545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Karnataka Election 2023 LIVE Updates: 5.3 crore voters decide fate of 2,615  candidates today | Hindustan Times

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மஜத, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் களத்தில் உள்ளன.

1985 ஆண்டு முதல் 38 ஆண்டுகளுக்கு கர்நாடகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த கட்சியே ஆட்சியை தக்க வைத்துக் கொண்டதில்லை.

How top Karnataka assembly constituencies fared in voter turnout | Latest  News India - Hindustan Times

இந்தச் சாதனையை நிகழ்த்த பாஜகவும், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கர்நாடக பேரவைத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸும் கடும் போட்டியில் உள்ளன.

2018இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் 72. 50% வாக்குகள் பதிவாயின. அதை 2023 தேர்தல் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset