நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சோனியா காந்திக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்

புது டெல்லி:

கர்நாடகத்தின் இறையாண்மைக்கு எவரும் அச்சுறுத்தலை ஏற்படுத்த காங்கிரஸ் அனுமதிக்காது என்று கருத்து தெரிவித்ததற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது.

கர்நாடகப் பேரவைத் தேர்தலில் புதன்கிழமையன்று தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான பிரசாரம் திங்கள்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.

கர்நாடகத்தின் பாரம்பரியம், இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றை எவரும் அச்சுறுத்த காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது என 6.5 கோடி கன்னட மக்களுக்கும் உறுதியளிக்கப்படுகிறது என்று சோனியா தெரிவித்ததாக காங்கிரஸ் ட்விட்டர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் தெரிவித்துள்ளது. இந்தியாவின் முக்கிய மாநிலமாக கர்நாடகம் திகழ்ந்து வருகிறது.

அந்த மாநிலத்தின் இறையாண்மையைக் காப்பதாகக் கூறுவது, மாநிலத்தின் பிரிவினையை ஊக்குவிப்பது போலவே ஆகும். இது தவறான பின்விளைவுகளை ஏற்படுத்தும். அதைக் கருத்தில்கொண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது பாஜக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் விமர்சனம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் ரண்தீப் சுர்ஜேவாலா வெளியிட்ட அறிக்கையில், கர்நாடகத்தின் சுயமரியாதையை இழிவுபடுத்தும் வகையில் பாஜக நடந்துகொண்டு வருகிறது. அதற்கான காரணத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை விளக்கவில்லை என்றார்.

இதனிடையே, உலகிலேயே அதிக ஊழல் செய்தது காங்கிரஸ் கட்சிதான் என விளம்பரம் அளித்து பிரசாரம் செய்த பாஜகவுக்கு இதுகுறித்து ஆதாரங்களை அளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset