நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அமலாக்கத் துறை இயக்குநர் பதவி நீட்டிப்பு புதிய காரணத்தை சொன்னது ஒன்றிய அரசு

புது டெல்லி:

எஃப்ஏடிஎஃப் கேட்டுக் கொண்டதால்தான் அமலாக்கத் துறை இயக்குநராக சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலம் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டதற்கு புதிய காரணத்தை ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

மேலும், நவம்பர் மாதத்துக்குப் பிறகு மிஸ்ரா அந்தப் பதவியில் நீடிக்க மாட்டார் என்று உறுதி அளித்தது.

சஞ்சய் குமார் மிஸ்ரா 2018 அமலாக்கத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். 2020, 2021 மீண்டும் நீட்டிக்கப்பட்டது.

மூன்றாவது முறை பதவி நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விக்ரம் நாத், சஞ்சய் கரோல் ஆகியோர் திங்கள்கிழமை விசாரித்தனர்.

அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மிஸ்ரா கவனித்து வரும் முக்கிய வழக்கு விசாரணைகளில் தொடர்வதற்காகவும், நாட்டின் நலன் கருதியும் அவரது பணிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

2019இல் நடைபெற இருந்த எஃப்ஏடிஎஃப் கூட்டம் கரோனா பரவல் காரணத்தால் 2023க்கு ஒத்திவைக்கப்பட்டது. அதனால் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், ஒரு நபர் இல்லை என்றால் அமலாக்கத் துறை செயலற்றதாகிவிடுமா?

2021இல் மிஸ்ராவுக்கு மீண்டும் பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது ஏன் எஃப்ஏடிஎஃப் பரிந்துரையை அரசு தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு மேத்தா, அமலாக்கத் துறையில் மிஸ்ராவுக்கு அடுத்தபடியாக வேறுயாருமில்லை.

முக்கியமான விசாரணைகளை மிஸ்ரா கவனித்து வருவதால் அவரது பதவி நீட்டிப்பு அவசியம் என்று உச்ச நீதிமன்றத்தில் அப்போதே மத்திய அரசு குறிப்பிட்டது என்றார். இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset