நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய நீதிபதி உள்பட 68 பேருக்கு பதவி உயர்வில் சர்ச்சை

புது டெல்லி: 

குஜராத்தில் நீதித் துறை கீழ்நிலை அதிகாரிகள் 68 பேருக்கு விசாரணை நீதிபதி, மாவட்ட நீதிபதியாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் மே 8ஆம் தேதி விசாரிக்கிறது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கிய சூரத் விசாரணை நீதிமன்ற நீதிபதி ஹரீஷ் ஹஸ்முக்பாய் வர்மாவும் இந்தப் பதவி உயர்வு சர்ச்சை பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

குஜராத் மாவட்ட நீதிபதிகள் நியமனத்தில், நீதித் துறை பணியாளர்களுக்கு 65 சதவீத இடஒதுக்கீட்டுடன் தகுதி மற்றும் பணி மூப்பு அடிப்படையிலும், தேர்வில் அதிக மதிப்பெண் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

ஆனால், தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு இடஒதுக்கீடு முறையில் மாவட்ட நீதிபதி பதவிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று குஜராத் அரசு சட்டத் துறையில் கீழ்நிலை செயலராகப் பணியாற்றும் ரவிகுமார் மேத்தா, சச்சின் பிரதாப்ராய் மேத்தா ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, அசானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு குஜராத் அரசு பதிலளிக்க நோட்டீஸ் அளித்திருந்தது.

ஆனால், ஏப்ரல் 18ஆம் தேதி குஜராத் அரசு 68 நீதித் துறைப் பணியாளர்களுக்கு நீதிபதியாகப் பதவி உயர்வு அளித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கை கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி மீண்டும் விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போதே ஏப்ரல் 18ஆம் தேதி 68 நீதிமன்ற பணியாளர்களுக்கு குஜராத் அரசு நீதிபதியாகப் பதவி உயர்வு அளித்துள்ளது.

நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதை தெரிந்து கொண்ட குஜராத் அரசு இந்தப் பதவி உயர்வை அளித்துள்ளது. அவசர கதியில் வழங்கப்பட்டுள்ள இந்தப் பதவி உயர்வு உத்தரவு பாராட்டக்கூடிய வகையில் இல்லை.

பதவி உயர்வு அளிக்க வேண்டிய அதிக அவசரம் எழவில்லை. இதுதொடர்பாக மாநில அரசு செயலர் விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்தப் பதவி உயர்வுக்கு தேர்வானவர்களின் திறமையின் அடிப்படையிலான பட்டியலை குஜராத் உயர்நீதிமன்றப் பதிவாளர் அளிக்க வேண்டும் என  ஏப்ரல் 28இல் பிறப்பித்த உத்தரவில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை மே 8-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset