நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இடைக்கால பிரதமராக இரும்பு பெண்மணி ரஃபிடாவை நியமிக்க வலியுறுத்தி பிரசார இயக்கம்

கோலாலம்பூர்:

நாட்டின் இடைக்கால பிரதமராக முன்னாள் அமைச்சர் ரஃபிடா அசீஸ் நியமிக்கப்பட வேண்டும் என்ற பிரசார இயக்கம் தொடங்கப்பட்டது பல்வேறு தரப்பினரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

பிரசார இயக்கம் தொடங்கப்பட்ட சில மணி நேரங்களில் 400க்கும் அதிகமானோர் அதை ஆதரித்து கையெழுத்திட்டதாக தகவல் வெளியானது. எனினும், இப்பிரசாரம் வெற்றி பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

Willy Lim என்பவரால் இந்தப் பிரசாரம் தொடங்கப்பட்டது. இதற்கான மனுவில், புதிதாக அமையும் இடைக்கால அரசாங்கத்தில் சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில் செயல்படும் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இடைக்கால அரசாங்கத்துக்கு தலைமையேற்க, ஏற்கெனவே திறமையை நிரூபித்த, உறுதியான ஒரு தலைவர்தான் தேவை என்றும், அந்தப் பணிக்கு டான்ஸ்ரீ ரஃபிடா அசீஸ் தான் பொருத்தமானவர் என்றும் அந்த மனுவில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இன்று இரவு சுமார் 7.40 மணியளவில் இந்த மனுவுக்கு 462 பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
எனினும், கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டமானது, பிரதமராக பதவி ஏற்பவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறது. அத்தகைய ஒரு எம்பிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கும் என கருதும் பட்சத்தில் மாமன்னர் அவரை பிரதமராக தேர்வு செய்வார். செனட்டராக நியமிக்கப்படும் பட்சத்தில் ஒருவரால் அமைச்சராக முடியும்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset