செய்திகள் மலேசியா
படிவம் 4 வரலாற்று பாடப்புத்தகத்தில் பிபிபி கட்சியின் தகவல்களை கல்வியமைச்சு சரி செய்ய வேண்டும்: சத்யா
கோலாலம்பூர்:
படிவம் 4 வரலாற்று பாடப்புத்தகத்தில் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் தோற்றுவிக்கப்பட்ட கட்சிகளின் பெயர்களையும் அதன் தலைவர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
அந்த வகையில் 1953 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட பிபிபி எனப்படும் மக்கள் முற்போக்கு கட்சியின் பெயரும் இடம் பெற்றுள்ளது பெருமைக்குரியது.
ஆனால் இந்த பாடப்புத்தகத்தில் பிபிபி கட்சியை தோற்றுவித்தவர்களின் பெயர்களும் தேதியும் தவறுதலாக இடம் பெற்றுள்ளது என்று பிபிபி கட்சியின் தேசிய இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன் தெரிவித்தார்.
முதலில் பேரா பிபிபி கட்சியை தோற்றுவித்தவர்கள் எஸ்.கனகரத்தினம் பிள்ளை, பிரபல வழக்கறிஞர் டி.ஆர். சீனிவாசகம் ஆவர்.
ஆனால் வரலாற்று பாடப்புத்தகத்தில் டாக்டர் எஸ்.கணபதிபிள்ளை, டாக்டர் சீனிவாசகம் ஆகியோர் பிபிபி கட்சியை தோற்றுவித்தவர்கள் என்று இடம் பெற்றுள்ளது தவறாகும்.
அதேபோல் முதலில் பேரா பிபிபி கட்சி 10-4-1953 இல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.
பின்னர் 1956 இல் பிபிபி கட்சி தேசிய அளவில் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் பாடப்புத்தகத்தில் ஜனவரி 1953 என்று இடம் பெற்றுள்ளது தவறாகும்.
இந்த இரண்டையும் கல்வியமைச்சு சரி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 2, 2024, 5:38 pm
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தம்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது: டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்
December 2, 2024, 4:51 pm
வெள்ளப்பேரிடர் காரணமாக எஸ்.பி.எம், எஸ்.டி.பி.எம் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை
December 2, 2024, 3:49 pm
ஹலால் தொழிற்துறையை மேம்படுத்த திமோர் லெஸ்டேவிற்கு மலேசியா உதவ தயாராக உள்ளது
December 2, 2024, 2:37 pm
நம்பிக்கை நட்சத்திர விருது விழாவில் பன்முகக் கலைஞர் விருதை டத்தோ கீதாஞ்சலி ஜி பெற்றார்
December 2, 2024, 2:25 pm
53க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு தானியங்கி நுழைவாயில் வழங்கப்படும்
December 2, 2024, 12:37 pm
டிசம்பர் 15ஆம்தேதி ஐபிஎப் கட்சியின் தேசியப் பேராளர் மாநாடு: துணைப் பிரதமர் தலைமையேற்பார்
December 2, 2024, 12:25 pm