நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆசியான் கூட்டமைப்பில் திமோர் லெஸ்தே இணைவதற்கு மலேசியா ஆதரவு: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு 

கோலாலம்பூர்: 

ஆசியான் கூட்டமைப்பில் திமோர் லெஸ்தே இணைவதற்கு மலேசியா ஆதரவு தெரிவிப்பதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

ஆசியானில் திமோர் லெஸ்தே நிரந்தர நாடாக இடம்பெறுவதை மலேசியா உறுதி செய்யும். இதனால் அடுத்தாண்டு ஆசியானில் திமோர் லெஸ்தே இடம்பெறும் என்று மலேசியா எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார் 

திமோர் லெஸ்தேவிற்கு உறுப்பியம் கிடைக்க மலேசியா தன்னால் இயன்ற அளவில் முயற்சிகளை மேற்கொள்ளும் என்று அவர் சொன்னார். 

இந்த விவகாரம் தொடர்பாக ஸ்கனானா குஸ்மாவோவின் வேண்டுகோளுக்கு இணங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அன்வார் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset