செய்திகள் மலேசியா
UPSR, PT 3 தேர்வுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்: கல்வியமைச்சுக்கு டத்தோ லோகபாலா வேண்டுகோள்
கோலாலம்பூர்:
ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு யூபிஎஸ்ஆர் தேர்வு, படிவம் 3 மாணவர்களுக்கு பிடி 3 தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக்கை பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா கேட்டுக் கொண்டார்.
தற்போது யூபிஎஸ்ஆர் தேர்வு இல்லாததால் லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆரம்பத்திலேயே கல்வியை கைவிடுகின்றனர்.
அதேபோல் பிஎம்ஆர் தேர்வு இல்லாததால் 30,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வியை கைவிடுகிறார்கள்.
யூபிஎஸ்ஆர், பிடி3 இல்லாததால் எஸ்பிஎம் தேர்வு மிகவும் கடுமையாக இருப்பதால் பத்தாயிரம் மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வில் அமருவது இல்லை. இது பெரும் கவலையை அளிக்கிறது.
எஸ்பிஎம் தேர்வு எழுவதற்கு முன்பே மாணவர்கள் தங்களது கல்வி அறிவை வளர்த்துக் கொள்ள யூபிஎஸ்ஆர், பிடி 3 தேர்வு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்.
அப்போதுதான் அவர்கள் கல்வியை கைவிட மாட்டார்கள் என்று அவர் சொன்னார்.
பிபிபி கட்சியின் இந்த கோரிக்கையை கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
பெரும்பாலான பெற்றோர்கள் மீண்டும் யூபிஎஸ் ஆர், பிடி 3 அமல் படுத்த வேண்டும் என்று பெரிதும் விரும்புகின்றனர்.
கல்வியமைச்சும் களத்தில் இறங்கி பெற்றோர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இந்நாட்டில் எந்த ஒரு மாணவரும் கல்வியைக் கைவிடக் கூடாது.
தற்போது உள்ள நிலவரப்படி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிடுகிறார்கள்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் மீண்டும் யூபிஎஸ்ஆர், பிடி 3 அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
இன்று பிபிபி கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செயலவை கூட்டத்திற்கு பின்னர் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 2, 2024, 5:38 pm
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தம்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது: டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்
December 2, 2024, 4:51 pm
வெள்ளப்பேரிடர் காரணமாக எஸ்.பி.எம், எஸ்.டி.பி.எம் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை
December 2, 2024, 3:49 pm
ஹலால் தொழிற்துறையை மேம்படுத்த திமோர் லெஸ்டேவிற்கு மலேசியா உதவ தயாராக உள்ளது
December 2, 2024, 2:37 pm
நம்பிக்கை நட்சத்திர விருது விழாவில் பன்முகக் கலைஞர் விருதை டத்தோ கீதாஞ்சலி ஜி பெற்றார்
December 2, 2024, 2:25 pm
53க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு தானியங்கி நுழைவாயில் வழங்கப்படும்
December 2, 2024, 12:37 pm
டிசம்பர் 15ஆம்தேதி ஐபிஎப் கட்சியின் தேசியப் பேராளர் மாநாடு: துணைப் பிரதமர் தலைமையேற்பார்
December 2, 2024, 12:15 pm