நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ளப்பேரிடர் காரணமாக எஸ்.பி.எம், எஸ்.டி.பி.எம் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை 

கோலாலம்பூர்: 

வெள்ளப்பேரிடர் காரணமாக எஸ்.பி.எம், எஸ்.டி.பி.எம் பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கல்வியமைச்சின் தலைமை இயக்குநர் அஸ்மான் அட்னான் கூறினார் 

வெள்ளத்தை எதிர்கொள்ள கல்வியமைச்சு போதிய அணுகுமுறைகளையும் வழிகாட்டி நெறிமுறைகளையும் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார் 

வெள்ளம் வந்தாலும் மாணவர்கள் பத்திரமாக பொதுத்தேர்வுகளை எழுதுவார்கள் என்று கல்வியமைச்சு உத்தரவாதம் அளிப்பதாக அவர் சொன்னார் 

நாடு முழுவதும் வெள்ளப்பேரிடரால் சுமார் 132 பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளதைக் கல்வியமைச்சு கண்டறிந்துள்ளது 

இந்த விவகாரம் தொடர்பாக மாநிலம் வாரியாக பாதிக்கப்பட்ட பள்ளிகள் தொடர்பான மாநில கல்வி துறையின் அறிக்கைக்குக் கல்வி அமைச்சு காத்திருப்பதாக அவர் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset