நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தம்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது: டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்

கோலாலம்பூர்: 

1எம்டிபி வழக்கு விசாரணையில் தமக்கு எதிராக அவசரமாக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. இந்த விவகாரத்தில் தம்மிடம் போதிய விளக்கங்களைப் பெறாமல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக முன்னாள் பிரதமர் நஜிப் சொன்னார் 

தம்மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றங்களும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சுமத்தப்பட்டதாகும் என்று அவர் கூறினார் 

வழக்கு விசாரணையில் முழு விளக்கங்கள் வழங்கும் என் தரப்பு நியாயத்தைச் சொல்லவும் தமக்கு இடமளிக்கவில்லை என்று அவர் சாடினார். 

கடந்த 2018ஆம் ஆண்டு 1எம்டிபி வழக்கு தொடர்பாக நஜிப்பிற்கு எதிராக எம்.ஏ.சி.சி தரப்பு வாக்குமூலங்களைப் பதிவு செய்தது 

அதே ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது 

பணச்சலவை, அதிகாரத்துஷ்பிரயோகம் உட்படுத்தி டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கிற்கு எதிராக 25 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டது. 

இந்த 1எம்டிபி வழக்கு விசாரணை நீதிபதி கொலின் லாரன்ஸ் செகுவாரா செவிமடுத்தார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset