செய்திகள் மலேசியா
டிசம்பர் 15ஆம்தேதி ஐபிஎப் கட்சியின் தேசியப் பேராளர் மாநாடு: துணைப் பிரதமர் தலைமையேற்பார்
செர்டாங்:
ஐபிஎப் கட்சியின் தேசிய பேராளர் மாநாடு வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி பாங்கி அவனியூ மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
ஐபிஎப் கட்சியின் இந்த 32ஆவது தேசிய பேராளர் மாநாட்டை துணை பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹிட் ஹமிடி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்.
இந்த பேராளர் மாநாட்டில் ஆயிரம் பேராளர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று ஐபிஎப் கட்சியின் தேசிய செயலாளர் மோகன் தெரிவித்தார்.
தேசிய முன்னணி, பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும்.
தற்போது மடானி அரசாங்கத்தில் தேசிய முன்னணி, பக்கத்தான் ஹராப்பான் கட்சிகள் இடம் பெற்றுள்ளதால் அதில் அங்கம் வகிக்கும் அனைவருக்கும் மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.
கடந்த 1990ஆம் ஆண்டில் டான்ஸ்ரீ எம்.ஜி. பண்டிதனால் ஐபிஎப் கட்சி தோற்றுவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நாட்டில் விளிம்புநிலை மக்களான ஏழை எளிய இந்தியர்களுக்காக ஐபிஎப் கட்சி உருவாக்கப்பட்டது.
பல போராட்டங்கள் அறைகூவல்களுக்கு மத்தியில் கடந்த கடந்த 34 ஆண்டுகளாக இந்த நாட்டில் ஐபிஎப் கட்சி தொடர்ந்து வெற்றி நடைபோடுகிறது.
இந்த மாநாட்டில் ஐபிஎப் கட்சியின் தேசியப் பேராளர் மாநாட்டில் முக்கிய தீர்மானமாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் உருவாக்கிய இந்தியர்களுக்கான புளு பிரிண்ட் அமல்படுத்த வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோளாகும் என்று அவர் சொன்னார்.
இன்று செர்டாங்கில் உள்ள ஐபிஎப் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் செயலாளர் மோகன், இளைஞர் அணி தலைவர் கணேஷ் குமார் சம்பந்தமான, உதவித் தலைவர் பன்னீர் செல்வம், இளஞ்செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 2, 2024, 5:38 pm
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தம்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது: டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்
December 2, 2024, 4:51 pm
வெள்ளப்பேரிடர் காரணமாக எஸ்.பி.எம், எஸ்.டி.பி.எம் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை
December 2, 2024, 3:49 pm
ஹலால் தொழிற்துறையை மேம்படுத்த திமோர் லெஸ்டேவிற்கு மலேசியா உதவ தயாராக உள்ளது
December 2, 2024, 2:37 pm
நம்பிக்கை நட்சத்திர விருது விழாவில் பன்முகக் கலைஞர் விருதை டத்தோ கீதாஞ்சலி ஜி பெற்றார்
December 2, 2024, 2:25 pm
53க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு தானியங்கி நுழைவாயில் வழங்கப்படும்
December 2, 2024, 12:25 pm
UPSR, PT 3 தேர்வுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்: கல்வியமைச்சுக்கு டத்தோ லோகபாலா வேண்டுகோள்
December 2, 2024, 12:15 pm