நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவின் விருந்தினர் என்றும் பாராமல் பிலாவல் பூட்டோவை பயங்கரவாதத்தின் செய்தித் தொடர்பாளர் என்று விமர்சித்த ஜெய்சங்கர்

புது டெல்லி: 

இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் புட்டோவை பயங்கரவாதத்தின் செய்தித் தொடர்பாளர் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் காட்டமாக விமர்சித்தார்.

கோவாவின் பெனௌலிம் பகுதியில் அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் சீன வெளியுறவு அமைச்சர் கின் காங், ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் பங்கேற்றனர்.

மாநாட்டில் பேசிய பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் புட்டோ ஜர்தாரி, பயங்கரவாதம் குறித்து பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சராக மட்டும் பேசவில்லை.

பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநஸீர் புட்டோ எனது தாயின் மகனாகவும் பேசுகிறேன்.

பயங்கரவாதத்தை ஒழிக்கும் பிராந்திய மற்றும் உலகளாவிய நடவடிக்கைகளில் அங்கமாக இருக்க வேண்டும் என்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது.

பயங்கரவாதத்தை ஒழிக்க விரிவான அணுகுமுறை மட்டுமின்றி, கூட்டு அணுகுமுறையும் தேவை.
ராஜீய ரீதியில் ஆதாயமடைவதற்கான ஆயுதமாக பயங்கரவாதத்தை பயன்படுத்திக் கொள்ளும் நடவடிக்கையில் எவரும் சிக்கிக் கொள்ளக் கூடாது என்றார்.

மாநாட்டிற்கு பிறகு ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர், நியாயப்படுத்துபவர், அதன் செய்தித் தொடர்பாளர் என்ற முறையில், பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்த தனது நிலைப்பாட்டை பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் புட்டோ எஸ்சிஓ கூட்டத்தில் தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை கையாள்வதில் பாகிஸ்தான் மீதான நம்பகத்தன்மை, அந்நாட்டின் அந்நிய செலாவணி மதிப்பைவிட வேகமாக சரிந்து வருகிறது என்றும் ஜெய்சங்கர் விமர்சித்தார்.

பாகிஸ்தான் அமைச்சர் என்றும் பாராமல், இந்தியாவின் விருந்தினர் என்றும் கருதாமல் பிலாவல் பூட்டோவை பயங்கரவாதத்தின் செய்தித் தொடர்பாளர் என்று  ஜெய்சங்கர் கடும் விமர்சனம் செய்ததை பன்னாட்டு அமைச்சர்கள் ஆச்சர்யத்தோடு பார்த்தனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset