நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்குக் கடும் எதிர்ப்பு; கோவையில்  இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர் 

கோயமுத்தூர் : 

இந்தி இயக்குனர் சுதீப்டோ சென், 'தி கேரளா ஸ்டோரி' என்ற பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார்.  அதில் கேரளாவில் இருந்து 32 ஆயிரம் இளம்பெண்கள் மாயமாவது போன்றும், அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேருவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றன. இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கடும் எதிர்ப்புக்கு இடையே 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கேரளாவில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து கொச்சியில் காங்கிரஸ் இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், கோவையின் முக்கிய சாலையில் உள்ள வனிகவளாகத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் 12.45 மணியளவில் வெளியானது.

இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டரை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிறுபான்மையினருக்கு எதிராக இந்த படத்தில் வெறுப்பு பிரச்சாரம் செய்யப்படுவதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே சிறிது தள்ளு முள்ளு ஏற்பட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset