நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மணிப்பூரில் கலவரம்: வன்முறையாளர்களைக் கண்டதும் சுட உத்தரவு

இம்பால்:

மணிப்பூரில் பழங்குடியின சமூகத்தினருக்கும், மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும் இடையே கலவரம் வெடித்துள்ளது.

வீடுகள், கடைகள், வழிபாட்டுத் தலங்களுக்கு வன்முறையாளர்கள் தீவைத்து வருவதால், அவர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் ராணுவத்தினர் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். செல்போன் சேவை முடக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் முதல்வர் பிரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

பெரும்பான்மை ஹிந்துகளாக உள்ள மைதேயி சமூகத்தினரை மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க கோரும் கோரிக்கை மீது மத்திய அரசுக்கு 4 வாரங்களுக்குள் பரிந்துரை அனுப்புமாறு, மணிப்பூர் அரசுக்கு மாநில உயர்நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.

மாநில மக்கள்தொகையில் 40 சதவீதம் உள்ள நாகா, குகி உள்ளிட்ட பழங்குடியினர், மைதேயி சமூகத்தினரின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால் இரு தரப்பினருக்கு இடையே மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்துள்ளது.

பொது அமைதியைப் பராமரிக்க, பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, மணிப்பூர் வன்முறைக்கு காரணம், பாஜகவின் வெறுப்புணர்வு அரசியல்தான் என்று காங்கிரஸ் சாடியுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset