நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்தின் சேவைகள் நிறுத்தம்

மும்பை:

கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால் அந்த நிறுவனத்தின் விமான சேவைகள் மே 3, 4ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக அதன் தலைவர் கௌசிக் கோனா தெரிவித்தார்.

திவால் நடவடிக்கையை தொடங்கும் வகையில் தில்லியில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் அந்நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

கௌசிக் கோனா மேலும் கூறுகையில், திவால் நடைமுறையை மேற்கொள்ள விண்ணப்பித்தது யாரும் எதிர்பாராத முடிவு. எங்களது நிறுவனத்தின் நலனைப் பாதுகாக்க இதை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

மே 3, 4ஆம் தேதிகளில் விமான சேவை ரத்து செய்யப்படும் நிலையில், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் எங்களது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளும்போது, விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என்றார்.

கடந்த 17 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த விமான நிறுவனத்தில் 5,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset