நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சரத்பவார் அறிவிப்பு

மும்பை:

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகளை ஒன்றிணைத்து வந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அவரது கட்சி தலைவர் பதவியிலிருந்தும், தேர்தலில் போட்டியிடுவதிலிருந்தும் விலகுவதாக திடீரென அறிவித்தார்.

63 ஆண்டு கால நீண்ட அரசியல் பயணத்தில் இருந்து பின்வாங்குவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதால் கட்சித்  தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது அவரது கட்சித் தொண்டர்கள் மட்டுமல்லாமல், தேசிய அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1999ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய சரத் பவார், நான்கு முறை மகாராஷ்டிர முதல்வராகவும், மத்தியில் பாதுகாப்பு மற்றும் வேளாண் துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தனது வாழ்க்கை வரலாற்று நூலின் கூடுதல் தகவல்கள் அடங்கிய பிரதியை வெளியிடும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சரத் பவார், எனது நீண்ட பொது வாழ்க்கையில் பின்வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

எனவே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன்.
தேசியவாத காங்கிரஸின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் குறித்து முடிவு செய்ய கட்சி பிரமுகர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்றார்.

மூத்த தலைவர் அஜீத் பவார் பேசுகையில், "கட்சி தலைவராக நீடிக்க வேண்டும் என்ற தொண்டர்களின் வற்புறுத்தலை கருத்தில் கொண்டு, தனது முடிவை மறுபரிசீலனை செய்ய சரத் பவாருக்கு 2 அல்லது 3 நாள்கள் அவகாசம் வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset