நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பெண்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவித் தொகை: இனவெறியைத் தூண்டும் பஜ்ரங்தளம் மீது நடவடிக்கை என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

பெங்களூரு:

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை, வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும், இனவெறியைத் தூண்டும் பஜ்ரங்தளம் அமைப்புக்கு தடை, பாஜக ஆட்சியில் கொண்டு வந்த சர்ச்சைக்குரிய சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து சமுதாயத்தினரின் அமைதிப் பூங்கா' எனும் பெயரில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மல்லிகார்ஜுன கார்கே,

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றும் வாக்குறுதிகளாக ஒரு வீட்டுக்கு தலா 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை, வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 3,000, பட்டதாரி இளைஞர்களுக்கு தலா ரூ. 1,500, பிபிஎல் அட்டைதாரர்களுக்கு மாதம் 10 கிலோ இலவச அரிசி, அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் ஆகிய 5 வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்துள்ளோம்.

காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த 5 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

சட்டமும், அரசியலமைப்புச் சட்டமும் புனிதமானது. இதைப் பெரும்பான்மை அல்லது சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த தனிநபர்களோ, பஜ்ரங்தளம், பிஎஃப்ஐ போன்ற அமைப்புகளோ அல்லது பகைமையை ஊக்குவிப்பவர்களோ மீறுவதை ஏற்க முடியாது என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset