நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மூத்த குடிமக்களின் ரயில் கட்டண சலுகை ரத்தால் ரூ. 2,242 கோடி கூடுதல் வருவாய்

புது டெல்லி:

மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரயில் கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டதால்  2022-23ஆம் ஆண்டில் மட்டும் ரயில்வேக்கு  ரூ.2,242 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர சேகர் கௌர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு ரயில்வே இந்த பதிலை அளித்துள்ளது.

2022, ஏப்ரல் 1 முதல் 2023 மார்ச் 31 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 8 கோடி மூத்த குடிமக்கள் ரயில் கட்டணச் சலுகை இல்லாமல் பயணித்துள்ளனர்.

இதில் 4.6 கோடி ஆண்கள், 3.3. கோடி பெண்கள், 18 ஆயிரம் மூன்றாம் பாலினத்தவர். இதனால் ரயில்வேக்கு மொத்தம் ரூ.5,062 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இதில் கட்டணச் சலுகை அளிக்காததால் கிடைக்கப் பெற்ற கூடுதல் வருவாய் ரூ.2,242 கோடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020, மார்ச் முதல் ரயில்வே இந்த சலுகையை ரத்து  செய்தது. இந்த சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர்.

மூத்த குடிமக்களுக்கு சலுகை ரத்து செய்யப்பட்ட பிறகு அதன் மூலம் கிடைக்கும் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

2020 - 2022 ஆண்டில் 7.31 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். இதனால் ரயில்வேக்கு மொத்தம் ரூ.3,464 கோடி  வருவாய் கிடைத்துள்ளது. அதில், ரூ.1,500 கோடி கூடுதல் வருவாய் ஆகும். 2022-23-இல் 8 கோடி பேர் பயணம் செய்ததனால் மொத்தம் ரூ.5,062 கோடி வருவாயும்,இதில் ரூ.2,242 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset