நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஒன்றிய அரசு நீக்கிய பாடங்களை கேரள அரசு சேர்க்க திட்டம்

திருவனந்தபுரம்:

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) 11 மற்றும் 12ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களிலிருந்து  மகாத்மா காந்தி, ஆர்எஸ்எஸ் மீதான தடை, மொகலாயர்கள் உள்ளிட்ட பகுதிகள் நீக்கப்பட்டவைகளை மாநில அரசு பாடத் திட்டத்தில் சேர்த்து மாணவர்களுக்கு கற்பிக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

இந் நிலையில், பாடங்களை நீக்கிய முடிவை மறுஆய்வு செய்யுமாறு கேரள மாநிலத்தின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வி.சிவன்குட்டி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எழுதிய கடிதத்தில், குழந்தைகள் பொறுப்புள்ள குடிமக்கள்களாகவும் எதிர்கால தலைவர்களாகவும் பாடப்புத்தகங்களால் உருவாக்கப்படுகின்றனர்.

எனவே, விரிவான மற்றும் நடுநிலையான கல்வி அந்தப் பாடப்புத்தகங்கள் வழியாக குழந்தைகளுக்கு வழங்கப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும்.

சீரமைப்பு என்ற பெயரில் முக்கியமான பகுதிகள் பாடப்புத்தகத்திலிருந்து நீக்கும் என்சிஇஆர்டிஇன் முடிவு கவலையளிக்கிறது. இது குறித்து முன்கூட்டியே மறுஆய்வு செய்யவேண்டும்.

என்சிஇஆர்டியால் நீக்கப்பட்ட பாடப்பகுதிகள் மாநில பாடத்திட்டத்தின்படி இயங்கும் பள்ளிகளில் கற்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset