நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மோடி விஷப்பாம்பு போன்றவர்: மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்

புது டெல்லி:

பிரதமர் மோடி விஷப் பாம்பு போன்றவர் என்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார்.

கர்நாடகத்தில்  நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, மோடி விஷப் பாம்பு போன்றவர். அவரிடம் விஷம் இல்லை என நினைத்தீர்களானால் உணர்ந்து பாருங்கள். அவ்வாறு உணர்ந்து பார்க்க முயற்சித்தால், நீங்கள் இறந்துவிடுவீர்கள்; நிரந்தர தூக்கத்துக்கு சென்றுவிடுவீர்கள் என்றார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், பிரதமர் மீதான காங்கிரஸின் வெறுப்புணர்வு வெளிப்பட்டுள்ளது. தனது பேச்சுக்காக காங்கிரஸ் தலைவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், காங்கிரஸின் விரக்தி அதிகரித்து வருவதால், பிரதமர் மோடி மீதான அவதூறுகளும் அதிகரித்துள்ளன. அண்மைக் காலமாக, காங்கிரஸ் தலைவர்கள் பிரதமரை இகழ்ந்து பேசி வருகின்றனர். இப்போது கார்கே இழிவாக பேசியுள்ளார். இதை கர்நாடக மக்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். பிரதமரை அவமதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ள காங்கிரஸ் கும்பலுக்கு வாக்களிக்கவும் மாட்டார்கள் என்றார்.

பின்னர் கார்கே அளித்த விளக்கத்தில், பாஜக பாம்பு போன்றது; அதன் சித்தாந்தம் விஷம் போன்றது. அந்த சித்தாந்தத்தை ஆதரித்தால், மரணம் நிச்சயம் என்றுதான் நான் பேசினேன். மாறாக மோடிக்கு எதிராக எதையும் நான் பேசவில்லை என்றார் கார்கே.

இதனிடையே,  கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், கலவரங்களால் மாநிலம் அல்லல்படும் என்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது பெங்களூரு காவல்துறையில் அக்கட்சி தலைவர்கள் புகார் அளித்தனர்.

மாநிலத்தில் மத நல்லிணக்கத்தை குலைக்கும் நோக்கில், காங்கிரஸ் மீது குற்றம்சாட்டிய அமித் ஷா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset