நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ராகுலின் வழக்கு விசாரணையில் இருந்து பெண் நீதிபதி விலகல்

அகமதாபாத்: 

ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பதில் இருந்து குஜராத் உயர்நீதிமன்ற பெண் நீதிபதி விலகியுள்ளார்.

மோடி சமூகத்தினரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ராகுலுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, குஜராத்தின், சூரத் பெருநகர நடுவர் நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது.

இதனால் எம்.பி. பதவியை இழந்த ராகுல், கீழமை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சூரத் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க கோரிய ராகுலின் மனுவை ஏற்கவும், தீர்ப்புக்கு தடை விதிக்கவும் மாவட்ட நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதைத் தொடர்ந்து, குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த மனு, நீதிபதி கீதா கோபி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுவை அவசரமாக விசாரிக்க ராகுல் தரப்பு வழக்குரைஞர் பி.எஸ்.சம்பானேரி கோரினார்.

ஆனால், விசாரணையில் இருந்து தாம் விலகிக் கொள்வதாக நீதிபதி தெரிவித்தார். அதற்கான காரணம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset