நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

புல்டோசர் நடவடிக்கைக்கு அக்டோபர் வரை உச்சநீதிமன்றம் தடை

புது டெல்லி:

புல்டோசர் மூலம் கட்டிடங்களை இடிக்கும் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு அக்டோபர் 1-ம் தேதி வரை உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் முஸ்லிம்களின் கட்டடங்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக கூறி இடிக்கும் பணிகளை உள்ளாட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. உத்தர பிரதேசத்தை தொடர்ந்து குஜராத்திலும் இந்த புல்டோசர் நடவடிக்கை தொடர்ந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் ஹிரிஷிகேஷ் ராய், சுதான்சு துலியா, எஸ்விஎன் பாட்டீ ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது புல்டோசர் மூலம் குற்றம்சாட்டப்பட்வர்களின் வீடுகளை இடிப்பது சட்ட விரோதம் என்றுகூறி மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்தனர். 

சட்டம் முதன்மையாக உள்ள நாட்டில், வீடுகளை இடிக்கும் அச்சுறுத்தல் ஏற்றுக்கொள்ள முடியாதது. குடும்பத்தில் உள்ள ஒருவர் சட்டவிதிமுறைகளை மீறினார் என்பதற்காக, அவரது குடும்ப உறுப்பினர்கள் வசிக்கும்வீட்டை இடிக்க முடியாது. குற்றச்செயலில் ஈடுபட்டால், வீட்டை இடிக்க வேண்டும் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை’’ என நீதிபதிகள் கூறினர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset