நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

டெல்லியின் புதிய பெண் முதல்வர் அதிஷி

புது டெல்லி:

டெல்லி முதல்வர் பதவியை அர்விந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்ததைத்தொடர்ந்து ஆம் ஆத்மியின் சட்டப்பேரவை கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வித் துறை அமைச்சர் ஆதிஷி மர்லேனா சிங் புதிய முதல்வராக உள்ளார். துணைநிலை ஆளுநரை சந்தித்து, அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி திஹார் சிறையில் இருந்த முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 13-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.

முதல்வர் பதவியை அடுத்த 2 நாட்களில் ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார். நிரபராதி என நிரூபிக்கும் வரை  முதல்வர் பதவியில் அமரமாட்டேன். வரும் தேர்தலில் மக்கள் எனக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி பெற்ற பிறகே மீண்டும் முதல்வர் பதவியில் அமர்வேன் என்று கேஜ்ரிவால் சபதமிட்டார்.

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மாநில கல்வித்துறை அமைச்சர் ஆதிஷி மர்லேனா சிங் பெயரை கேஜ்ரிவால் முன்மொழிந்தார். இதற்கு அனைத்து எம்எல்ஏக்களும் ஆதரவுதெரிவித்தனர். இதையடுத்து, ஆம் ஆத்மியின் சட்டப்பேரவை கட்சி தலைவராக ஆதிஷிதேர்வு செய்யப்பட்டார்

பின்னர், செய்தியாளர்களிடம் பேசி  ஆதிஷி, டெல்லி மக்களின் அன்பை பெற்ற அண்ணன் கேஜ்ரிவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார். அதனால், எனக்கும், டெல்லி மக்களுக்கும் இது துயரமான நேரம். தேர்தலுக்கு பிறகு கேஜ்ரிவால் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்றார்.

டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் நவம்பரில் தேர்தல் நடத்த ஆம் ஆத்மிஎம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி மூத்த தலைவர் கோபால் ராய் தெரிவித்தார்.

காங்கிரஸ் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சீத், பாஜக முன்னாள் முதல்வர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரைத் தொடர்ந்து தில்லியின் மூன்றாவது பெண் முதல்வராகி உள்ளார் அதிஷி.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset