நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

6 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுதலையானார் தில்லி முதல்வர்: சிபிஐக்கு கண்டனம்

புது டெல்லி:

மதுபானக் கொள்கை வகுத்ததில் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட தில்லி முதல்வர் கேஜ்ரிவால்  6 மாதங்களுக்கு பிறகு உச்சநீதிமன்றம் அளித்த ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில், சிபிஐ வழக்கில் கேஜரிவாலுக்கு ஜாமீன் அளித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோர் சிபிஐயின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

அமலாக்கத் துறை வழக்கில் கேஜரிவால் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதே சிபிஐயின் நோக்கமாக இருந்தது..

அமலாக்கத் துறை வழக்கில் விடுவிக்கப்படும் தருணத்தில் அவரை சிபிஐ கைது செய்துள்ளது. அப்போது அவரை கைது செய்ததில் சிபிஐ காட்டிய அவசரத்தை புரிந்துகொள்ள முடியவில்லை.சிபிஐ கூண்டுக்கிளி அல்ல என்ற கண்ணோட்டமே இருக்க வேண்டும்.

ஒரே காரணத்துக்காக அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதிலும், முதல்வர் பதவியில் உள்ளவரை விடுவிக்காமல் தொடர்ந்து காவலில் வைப்பது நீதியை கேலிக்கூத்தாகும் செயலாகும் என்று நீதிபதி உஜ்ஜல் புயான் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset