நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

திருப்பதி லட்டுக்களில் விலங்கு கொழுப்பு இருந்தது ஆய்வில் உறுதி

அமராவதி:

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிப்பதற்கு விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு முன்வைத்த குற்றச்சாட்டு ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்தது.

திருப்பதி லட்டுக்களில் நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு உள்ளிட்ட தரமற்ற பொருள்களைப் பயன்படுத்தி லட்டு தயாரிக்கப்பட்டது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

லட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள்களை குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு வாரிய ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் விலங்கு கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை லட்டு தயாரிப்பில் கலந்துள்ளதாக உறுதியான ஆய்வறிக்கையை தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அன்னம் வெங்கட ரமணா ரெட்டி வெளியிட்டார்.

எனினும், இதுபோன்ற அவதூறுகளை பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவர் எச்சரித்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset