நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உக்ரைனுக்கு இந்தியா பீரங்கி குண்டுகள் வழங்கியதால் ரஷ்யா அதிருப்தி 

புது டெல்லி:

ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்த பீரங்கி குண்டுகள் உக்ரைனுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியானது.  

ஐரோப்பிய நாடுகளுக்கு இந்திய ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் ஏற்றுமதி செய்த பீரங்கி குண்டுகள் உக்ரைனுக்கு திருப்பிவிடப்பட்டன. இதற்கு ரஷியாவில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையிலும் இதை தடுக்க இந்தியா முயற்சி செய்யவில்லை. கடந்த ஓராண்டாக பீரங்கி குண்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், அணு ஆயுத விலக்கல் ஒப்பந்தத்தின் அடிப்படையிலான சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு ஆயுத ஏற்றுமதியை இந்தியா மேற்கொண்டு வருகிறது.  

ராய்ட்டர்ஸ் ஊடகத்தில் சர்வதேச விதிகளை இந்தியா மீறியதாக வெளியான செய்தி தவறானது. அதற்கு எவ்வித முறையான ஆதாரங்களும் இல்லை என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset